Connect with us

உஷாரா இருங்க மக்களே!! நாளை 9 மாவட்டங்களுக்கு வெளுக்க போகும் கனமழை;;

rain 2

தமிழகம்

உஷாரா இருங்க மக்களே!! நாளை 9 மாவட்டங்களுக்கு வெளுக்க போகும் கனமழை;;

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.. இந்நிலையில் நாளை 10 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, விருதுநகர்‌, கன்னியாகுமரி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, விருதுநகர்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

வருகின்ற 19,20- ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top