தமிழகத்தை மிரட்டி வரும் கனமழை! இயல்பை விட பல மடங்கு மழைப்பொழிவு!!

தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவு முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. அவை தற்போது வரை நீடித்து பெய்து வருவதாகவும் காணப்படுகிறது. அதன்படி சென்னையில் அண்ணாநகர், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மழை

சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, கிண்டி, தரமணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களிலும் தற்போதும் கனமழை  தொடர்கிறது. இதனால் சென்னையில் இயல்பை விட 77 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதுவரை 23 சென்டி மீட்டருக்கு பதிலாக  47 சென்டி மீட்டர் மழை பதிவானது. இது இயல்பை விட 77 சதவீதம் அதிகமாகும்.

நம் தமிழகமும் 54 சென்டிமீட்டர் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பெற்றுள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதுவரை 20 சென்டிமீட்டர் பதிலாக, தமிழகத்தில் 39 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. இது தமிழகத்தில் இயல்பை விட 50% அதிகம். இந்த வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தை மிரட்டி வருகிறது என்பது கண்முன்னே தெரிந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment