தென் மாவட்டங்களை குறிவைத்த கனமழை! இன்று 5 மாவட்டங்களில் கனமழை! நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய தினம் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றைய தினம் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலமும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோரப் பகுதி வரை நீடிப்பதால் இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளையதினம் தென் தமிழகத்தை குறிவைத்து கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நவம்பர் 23ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் ,புதுச்சேரி, காரைக்கால் மற்றும் இதர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. நவம்பர் 24ம் தேதியில் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment