Connect with us

கனமழை எதிரொலி: ஐடி ஊழியர்களுக்கு விடுமுறை..!!!

employee

செய்திகள்

கனமழை எதிரொலி: ஐடி ஊழியர்களுக்கு விடுமுறை..!!!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலம் முழுவதும் கடல் போல் காட்சியளிக்கிறது. இதன் கரணமாக பல்வேறு இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக ஐ.டி நிறுவன ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பலபேர் டிராக்டர்களில் ரூ.50 கொடுத்து வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

அதோடு வெளிவட்ட சாலையில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளநீரால் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஐடி ஊழியர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத ஒரு சூழலும் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பெங்களூருரில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top