கனமழை எதிரொலி: சுருளியில் குளிக்க தடை..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைப்பகுதிகள் நிரம்பி வழிவதால் பல்வேறு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேனி அடுத்த கம்பம் பகுதியில் உள்ள சுருளி அருவிகளுக்கு நாள்தோறும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதிர்ச்சி!! மாலியில் பேருந்தில் குண்டுவெடிப்பு… 11 பேர் பலி!!

குறிப்பாக அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை போன்ற நீரோடைகளில் அதிக அளவு நீர்வரத்து வருவதால் நேற்றைய தினத்தில் சுருளி அருவியில் வெள்ளிப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணாமாக இன்றைய தினத்தில் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கம்பம் கிழக்கு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவி கொலை!! உயிரிழந்த தந்தையின் மரணத்தில் திடீர் திருப்பம்..!!

மேலும், அருவியில் நீர்வரத்து குறைந்ததும், மீண்டும் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment