கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி 141 பேர் பலி!!

மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோவி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை என்பது கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக இரவு , பகல் என்று கூட பாராமல் மழை பெய்வதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதே சமயம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலங்கள் உடைவது, நிலச்சரிவு ஏற்படுவது போன்ற இன்னல்கள் ஏற்படுகிறது.

சென்னையில் அதிர்ச்சி!! ஏசியில் மின் கசிவு.. தீயில் கருகி ஒருவர் பலி..!!

அந்த வகையில் கின்ஷாசா நகரில் பெய்த மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தது. இதன் காரணமாக சுமார் 141 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். வெள்ளித்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் ஜீன்-மைக்கேல் சாமா லுகொண்டே
நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

ஆவினில் இத்தனை கேக் வகைகளா? அசத்தும் ஆவின் நிறுவனம்!

பின்னர் வீடுகளை பறிகொடுத்த மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என ஆறுதல் கூறினார். அந்நாட்டில் இயற்கை பேரிடரால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.