கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:அமைச்சர் கூறும் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நான்கு நாட்களாக மழை நீருக்குள் தத்தளிக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் மீட்புக்குழு, தூர்வாரும் பணிகள் என அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ராமச்சந்திரன்

 

அதன்படி தனியார் நிறுவனங்கள் நாளை விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். அதிகமாக நீர் தேங்கும் பகுதிகளில் குளிப்பது, செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கே.கே.ஆர்.ஆர். எஸ். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

 

முகாம்

தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் நிவாரண முகாமுக்கு செல்ல வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 10 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மதுரை, நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 3 குழுக்களும் விரைந்து செல்லப்பட்டுள்ளன.  கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று இரவிலிருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இவ்வாறு பேட்டியளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் 36 மில்லிமீட்டர், கடலூரில் 19 மில்லிமீட்டர், சென்னையில் 15 மில்லி மீட்டர், காஞ்சிபுரத்தில் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment