34 மாவட்டங்களில் கொட்டும் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களிலும் அடுத்த சிலமணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது

இந்நிலையில் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் இரவு முதல் இரவு விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பல சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

cyclone1

cyclone1மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 390 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதாகவும் இந்த புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.

இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஏற்கனவே சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது தாம்பரம் நகராட்சி பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக கீழே உள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தாம்பரம் நகர மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார். அந்த எண்கள் பின்வருமாறு:

18004251600
18004254355
8438353355 (Whats App)

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.