Connect with us

உஷார்..!! உஷார்..!! 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை அப்டேட்…

rain

தமிழகம்

உஷார்..!! உஷார்..!! 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை அப்டேட்…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் இருந்த நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top