Connect with us

இந்த நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! கொட்டித் தீர்க்க போகிறது கனமழை!!

News

இந்த நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! கொட்டித் தீர்க்க போகிறது கனமழை!!

659dece7ae9969a6be2e12b63cb70a52

தற்போது தமிழகத்தில் உள்ள வானிலை ஆனது  மக்களுக்கு இதமான காற்றை கொடுக்கிறது. மேலும் பல பகுதிகளில் காற்றானது சூறைக்காற்று போல அடித்து வீசுகிறது மேலும் ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் சில வாரங்களாகவே பல பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருகிறது அந்த படி தற்போது குறிப்பிட்ட ஒரு நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நீலகிரி கோவை தேனி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.e96d050939d43131d755286821f5f75c-1

மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் திண்டுக்கல் தென்காசி நெல்லை தூத்துக்குடி ஈரோடு சேலம் மதுரை விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 26ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை சேலம் தர்மபுரி நாமக்கல் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top