நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வட தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
இவ்வாறாக வருகின்ற 13-ம் தேதி வரையில் தமிழகத்தில் மழை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,
இதனையடுத்து அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஓட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.