Connect with us

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அடித்து பெய்யப்போகுது கனமழை!!: வானிலை ஆய்வு மையம்

கனமழை

Tamil Nadu

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அடித்து பெய்யப்போகுது கனமழை!!: வானிலை ஆய்வு மையம்

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அடித்து பெய்யப்போகுது கனமழை!!: வானிலை ஆய்வு மையம்

இன்றைய தினம் நம் சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஏனென்றால் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு வடக்கு இலங்கை கடற்கரைப் பகுதிகளில் நிலைக்கு கொண்டு வருகிறது.

இவ்வாறுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவ்வாறுள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும் என்றும் சென்னைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top