Connect with us

தமிழகமே உஷார்!! இன்று 17 மாவட்டங்களில் கொட்டப் போகுது கனமழை;;

rain 1 1

Tamil Nadu

தமிழகமே உஷார்!! இன்று 17 மாவட்டங்களில் கொட்டப் போகுது கனமழை;;

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் பெரும்பால பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு போன்ற பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top