Tamil Nadu
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்காசி,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை முதல் 31ஆம் தேதி வரை கோவை நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் புதுவை மற்றும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
