மூன்று மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை மையம் அறிவிப்பு!குற்றாலத்தில் காட்டாறு போல வெள்ளம்!!

கனமழை

தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் மத்தியில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.வானிலை மையம்

அதன்படி தமிழகத்தில் இன்றைய தினம் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்றைய தினம் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு,திருப்பூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழைவிழுப்புரம் ,திருவண்ணாமலை, சேலம் உட்பட மொத்தம் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் காட்டாறு போல வெள்ளம் ஓடுகிறது. அங்கு உள்ள அருவிகளில் குளிக்க ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தற்போது நீட்டிக்கிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print