Connect with us

மக்களே உஷார்!! நாளை மறுநாள் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல் !!

rain

Tamil Nadu

மக்களே உஷார்!! நாளை மறுநாள் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல் !!

மக்களே உஷார்!! நாளை மறுநாள் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல் !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 21-ல் குமரி, நெல்லை மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சித்தாறு, பேச்சிப்பாறை, சிவலோகம், சின்கோனா, ஆகிய இடங்களில் மட்டும் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் கிழக்கு வழங்கக்கடல் – தெற்கு அந்தமான் கடலில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது.

இதனால் நாளை மார்ச் 20-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-ல் புயலாகவும் வலுவடையக்கூடும். புயலாக வலுவடைந்த பின் தென் கிழக்கு வங்கதேச கடலோர பகுதியில் நிலைபெறக்கூடும். இதனால் நாளை அந்தமான் கடற்பகுதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top