Connect with us

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

Capture 32

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வருகின்ற ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காரணப்படும், ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top