Connect with us

நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக மாவட்டங்களில் கனமழை….!

கனமழை

தமிழகம்

நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக மாவட்டங்களில் கனமழை….!

நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக மாவட்டங்களில் கனமழை….!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியது. ஏப்ரல் 19ஆம் தேதி தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top