ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையா? சென்னைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதா?

இன்றைய தினம் 16 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த 16 மாவட்டங்கள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி  மாவட்டங்களாக காணப்படுகின்றன.

வெளுத்து வாங்க போகும் கனமழை; இன்றும், நாளையும் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இருப்பினும் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் இன்றைய தினம் மிதமான வழக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலினை அளித்துள்ளது. அதன்படி சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் நாளை மறுநாள் சுமார் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூரில் நாளை மறுநாள் கனமழை வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment