அடாது பெய்யும் விடாத மழை: இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன என்பதும் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainஇந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், விழுப்புரம்,பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை உள்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று மழை பெய்யும் என்று அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.