Connect with us

அடுத்த இரண்டு மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil Nadu

அடுத்த இரண்டு மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

 அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரித்துள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

இந்த நிலையில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளதை அடுத்து மறைநூல் சாலையில் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top