இந்தியாவைப் போல இத்தாலியிலும்; ஒரு வருஷத்துல பெய்ய வேண்டிய மழை ஒரு சில மணி நேரத்தில் பெய்தது!

தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மழை நீரானது வெள்ளம் போல செல்கிறது. அனைத்து அணைகளும் தொடர்ச்சியாக நிறைந்து கொண்டே வருகிறது.இத்தாலியில்  கனமழை

இது இந்தியாவில் மட்டுமில்லாமல் இத்தாலி நாட்டிலும் நடைபெறுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தாலியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் நிலச்சரிவ ஏற்பட்டு அங்குள்ள மக்கள் அவதிப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இத்தாலியின் தெற்கு பகுதியில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத கனமழையால் ஸ்கார்டியா, கடானியா, கலாப்ரியா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இத்தாலியில் ஓர் ஆண்டுக்குத் தேவையான மழை ஒரு சில மணி நேரங்களில் பெய்ததாக கூறப்படுகிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் உள்ள பெரிய கட்டிடங்களும் இந்த மழையால் தகர்ந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டதாக காணப்படுகிறது. இதனால்  இத்தாலியில்  வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தோடு காணப்படுகின்றனர்.

இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் இருப்பிடமும் பாதிக்கப்பட்டன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment