விடிய விடிய சென்னையில் பலத்த மழை பெய்யும்;ரெண்டு நாளைக்கு ரெட் அலார்ட்!

2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளம் நீருக்குள் மூழ்கியது. அதனைப் போலவே தற்போது சென்னை முழுவதும் காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் மிகுந்த பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை

அதன்படி சென்னையில் நாளை காலை 8:30 மணிக்குள் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும், நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மிக பலத்த மழையால் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்குவது, போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சென்னையில் அதிகாலையில் கனமழை கொட்டும் என்றும் கூறப்படுகிறது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருகே கரையைக் கடப்பதால் சென்னையில் மிக கனமழை கொட்டும் என்றும் கூறப்படுகிறது.

கனமழை

சென்னையில் இன்று இரவு முதல் காலை வரை மிக பலத்த மழை பெய்யும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார். இந்த கனமழையின் காரணமாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அத்தியாவசிய தேவையை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment