Connect with us

சென்னை முழுதும் பெருமழை – தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம்!

News

சென்னை முழுதும் பெருமழை – தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக, நல்ல மழை பெய்து வந்தது. இதற்கிடையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையும் தமிழக மலைப் பிரதேசங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 

இது தண்ணீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வை தந்துள்ளது. வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சூழலில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு, ஆங்காங்கே உரிய ஏற்பாடுகளை செய்து வருவதையும் காண முடிகிறது. 

a9550702be7f53d5a2a91c07042431cd

பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கன மழை பெய்து, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம்  தகவலை வெளியிட்டுள்ளது. 

தென் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது. 

கடலோரப் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்துள்ளது. ஊட்டியைப் போன்ற குளிர்ச்சியான சூழலில், சென்னையில் இன்றைய நாள் முழுவதும் நீடிக்கும். இதற்கிடையில் சாரல் முதல் லேசான மழை வரை பெய்யக்கூடும். 

இன்று மாலை, இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் நல்ல மழை பெய்யும். இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சோழிங்க நல்லூரில் 46 மி.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் குறைந்தபட்சமாக 8 மி.மீ மழை பெய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top