நள்ளிரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழை; சென்னையின் நிலவரம் என்ன?

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்த நிலையில் தெற்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை முதல் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது.

இன்று நள்ளிரவு முதல் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி, கோயம்பேடு, தி நகர், உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழையால் சென்னையில் தி நகர் ஹபிபுல்லா சாலை, பாண்டி பசார், கிரியப்பா சாலை உள்ளிட்ட சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த இடியுடன் கூடிய மழையால் ராதாகிருஷ்ணன் சாலையில் மரம் முறிந்து விழுந்து பெரும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவ்வழியே பேருந்துகள் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலை பணிக்கு செல்லக்கூடிய வாகன ஒட்டிங்களும் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் ஜெ சி பி இயந்திரம் கொண்டு மரத்தை அகற்றி சுத்தம் செய்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகமா இருந்து வந்த நிலையில் வெளியில் செல்லுவதற்கெ அச்சமாக இருந்ததாகவும் நேற்று முதல் பெய்த மழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் உள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மற்றொரு புறம் ஆங்காங்கே மரங்கள் முறிந்து கிடப்பதாலும் தண்ணீர் தேங்கி இருப்பாத்தாலும் சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.