சென்னையை அச்சுறுத்தும் புயல்.. தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை

வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய புயல் காரணமாக சென்னைக்கு மிக மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்களுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆகிய இருவரும் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும் தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் கன மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் அந்த தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டிய பணிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.