9 மாவட்டங்களில் இன்று கொட்டப் போகிறது கனமழை: வானிலை அறிவிப்பு!

நம் தமிழகத்தில் இன்றைய தினம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கனமழை

அவை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை ஏற்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழைமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் ஆகியவற்றிலும் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.தென் மாவட்டங்கள், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதியில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment