தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தற்போது தமிழகத்தின் பல பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மழை

அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சியில் இன்றைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழை மேலும் விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை இன்றைய தினம் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 17 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதனை அடுத்து ராசிபுரம், செங்கல்பட்டு பகுதியில் தலா ஏழு சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாமரைப்பாக்கம் , சீர்காழி ஆகிய பகுதிகளில் தலா 6 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment