தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக தெருக்கள், சாலைகள், வீடுகள் என அனைத்திலும் மழைநீர் சென்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் கன மழை நீடிக்கும் என்று அறிவித்துள்ளது.
அதன் வரிசையில் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே இந்த மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அங்குள்ள மக்களுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளது.