உஷாரா இருங்க மக்களே!! நாளை 6 மாவட்டங்களில் கனமழை!!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளைய தினத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை!!

அதே போல் நாளை மறுநாள் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வருகின்ற 23,24-ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: 1.30 லட்சம் பேர் ஆப்சென்ட்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.