ரெடியா இருங்க!! நவ.21, 22 தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை!!

தமிழகத்தில் வருகின்ற 21,22 தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன் படி, இன்று மற்றும் நாளை ( தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் வருகின்ற 21 ஆம் தேதி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதனையடுத்து 22 ஆம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.