Connect with us

எச்சரிக்கை: 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்;;

rain 7

தமிழகம்

எச்சரிக்கை: 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்;;

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

அதே போல் நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் வருகின்ற 7-ம் தேதி வரையில் அடுத்த 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top