Connect with us

இன்று 4 மாவட்டங்களுக்கு “அதி கனமழை”-க்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!!

151452 150682 136036 rain2424

தமிழகம்

இன்று 4 மாவட்டங்களுக்கு “அதி கனமழை”-க்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதே போல் நீலகிரி, கோவையில் நாளை மறுநாளும் அதிகனமழை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது.

பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top