Connect with us

4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!!!

rain

தமிழகம்

4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மற்றும் கோவையில் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, திருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top