இன்று 19 மாவட்டங்களில் மிக பலத்த மழை! நாளை 10 மாவட்டங்களில் கனமழை!!

நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை காலம் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் 19 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

அதன்படி ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யலாம் என்றும்சென்னை  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்

கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளைய தினம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி ஈரோடு,நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல்,திருப்பத்தூர், சேலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment