Connect with us

உஷார்..! உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

rain 2

தமிழகம்

உஷார்..! உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அந்த வகையில் நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top