Connect with us

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: இரண்டு நாட்களுக்கு “14 மாவட்டங்களில் கனமழை”!!

செய்திகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: இரண்டு நாட்களுக்கு “14 மாவட்டங்களில் கனமழை”!!

eadcb503b04282826e41abcc2883bf88-2

இப்போது நம் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழகத்தில் தீவிரமாக கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.e96d050939d43131d755286821f5f75c-1

அதன்படி நீலகிரி, கோவை, சேலம் ,திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருப்பத்தூர், வேலூர் ,திருவண்ணாமலை, திருச்சியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தலைநகரான சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செப்டம்பர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு கூறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top