உஷார்! அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை – வானிலை அப்டேட்!!

கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கட்டாயமா? – வெளியான புதிய தகவல்!

அதன் படி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, நாமக்கல், வேலூர், ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுக்காப்பாக இருக்குமாறு வானிலை மையம் கூறியுள்ளது.

பீகாரில் பயங்கரம்!! ரயில் எஞ்ஜினை திருடிய மர்ம கும்பல்!!

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரன் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.