இன்னைக்கு 12 மாவட்டங்கள்! நாளைக்கு 11 மாவட்டங்கள்!! வெளுக்க போகுது கனமழை!!!

தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து கொண்டு வருகிறது.  இந்த நிலையில்  இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மதுரை, விருதுநகர், சேலம், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. திருவண்ணாமலை திருப்பத்தூர், வேலூர் ,பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி  மலையோர மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களிலும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வட மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் நாளையதினம் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை ,திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் நாளையதினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.வானிலை மையம்

நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்டோபர் 24ம் தேதியில் அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி,கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று வடகிழக்கு பருவமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று கூடுதலாக பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment