எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்: நாளை தொடங்கி அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!!

நம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையமும் இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

வானிலை மையம்

டிசம்பர் 7:

இந்த நிலையில் நாளை தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி நாளை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

டிசம்பர் 8:

நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி டிசம்பர் எட்டாம் தேதியில் கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இந்த கனமழை டிசம்பர் 8-ஆம் தேதி பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 9:

டிசம்பர் 9ஆம் தேதியில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 10:

டிசம்பர் 10 ஆம் தேதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment