இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர் கனமழை!: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு;

இன்று மற்றும் நாளை தினம் கனமழை பெய்ய உள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வானிலை மையம்

இதன் காரணமாக இன்றைய தினம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அதோடு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி ,திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நாளைய தினம் கன்னியாகுமரி,ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நவம்பர் 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நவம்பர் 28ம் தேதியில் அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நவம்பர் 29ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

நவம்பர் 29ஆம் தேதி ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment