தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெளியின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதோடு இடி, மின்னல் சமயத்தில் தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும் என கூறியுள்ளது.