மக்களே உஷார்!! அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை..வானிலை மையம் எச்சரிக்கை..
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்திற்குள் தமிழக கடல் பகுதியில் இருந்து இலங்கையை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த 12 மணி நேரத்திற்கு பின்னர் அதன் திசையில் மாற்றம் ஏற்பட்டு மேற்கு தென்மேற்கு திசையாக அடுத்த 36 மணி நேரத்திற்குள் வட தமிழக கடற்பகுதியை நோக்கி நகரக்கூடும் என கூறியுள்ளது.
இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை தென்கிழக்கு பகுதியில் 390 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், புதுச்சேரிக்கு 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதால் மார்ச் 9 வரை கனழை பெய்யும் என கூறியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
Related Topics:heavy rain, next 3 days, வானிலை மையம்
