
தமிழகம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுகல் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே போல் நாளைய தினத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுகல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் லட்சத்தீவு பகுதி, கர்நாடகா,கேரள கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய தென் கிழக்குப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று முதல் ஜூலை 4-ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
