Connect with us

மேலும் 4 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்க்கை

Tamil Nadu

மேலும் 4 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்க்கை

608543c4b261285ef26e7c0abd01d81c

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 

மேலும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top