Connect with us

10 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil Nadu

10 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய மழை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது 

மேலும் தமிழக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top