News
கனமழை எதிரொலி: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள்!
மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக மும்பை நகரில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கனமழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் மும்பையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த விபரங்கள் பின்வருமாறு:
1. மும்பை சிஎஸ்டி-மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (01133) ஜூலை 27-ஆம் தேதி வரை ரத்து
2. மங்களூரு சந்திப்பு-மும்பை சிஎஸ்டிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01134) ஜூலை 28-ஆம்தேதி வரை ரத்து
3. கிழக்கு கடற்கரை ரயில்வேயில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா-தன்பாத்துக்கு ஜூலை 25-ஆம்தேதி காலை 6 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் (03352) அதேநாள் முற்பகல் 11.30 மணிக்கு புறப்படும்.
4. குவஹாத்தி-பெங்களூரு கன்டோன்மென்ட்க்கு (வழி: பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி) ஜூலை 25-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் (02510) அதேநாள் முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும்.
5. திப்ருகார்க்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை (ஜூலை 24) இரவு 7.25 புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் (05906) 5 மணி நேரம் தாமதமாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்படுகிறது.
