Connect with us

இன்று: இடி, மின்னலுடன் கூடிய கனமழை-10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

கனமழை

Tamil Nadu

இன்று: இடி, மின்னலுடன் கூடிய கனமழை-10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

மே 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிலவும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வானிலை ஆனது மக்களுக்கு இதமானதாக காணப்படுகிறது.

ஏனென்றால் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

உஷார்..! உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் குறிப்பிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணத்தால் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top