
தமிழகம்
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்;
தமிழகத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வந்தன.
தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்றைய தினம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
