Connect with us

ஐந்து நாட்களில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்;

Rain 3

தமிழகம்

ஐந்து நாட்களில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்;

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் நடப்பாண்டில் மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக மே மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ந்து மிதமான மழை கிடைத்தன.

இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து நாட்களில் ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top